இந்திய மீனவர்கள் 10 பேர் கைது!

Editor 1

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று காலை 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், அவர்கள் 10 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இந்தநிலையில், அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share This Article