அர்ச்சுனாவின் உரை ஹன்சார்ட்டிலிருந்து நீக்கம்!

அர்ச்சுனாவின் உரை ஹன்சார்ட்டிலிருந்து நீக்கம்!

editor 2

பாராளுமன்றத்துக்குள் முறையற்ற விதமாக பேசிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உரை ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் யாழ். போதனா வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்களின் பிரச்னையை எழுப்புகிறேன் என தெரிவித்து வைத்தியர் த.சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதனையடுத்து, அவரது பேச்சு இடைநடுவில் நிறுத்தப்பட்டது. சபை முதல்வர் பிமல் ரட்நாயக்க எழுந்து, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளவேண்டிய, எழுப்பப்படும் கேள்விகள் பற்றி அர்ச்சுனாவுக்கு புரியும்படி வாசித்தார். எனினும் அதையும் கேட்காமல், அர்ச்சுனா கூச்சலிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும், ஓ.எல் சித்தியடையாதவர் என கூறி கூச்சலிட்டார்.

இதன்போது – பிமல் ரட்நாயக்க தலையிட்டு- கிண்ணியாவில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டதற்கு கணக்கு தீர்க்கிறீர்களா எனக்கேட்டார். இதனால் சபையில் பெரும் சிரிப் பொலி எழுந்தது.

Share This Article