அதிசொகுசு வாகனங்களை பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

Editor 1

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அதிகளவான செலவுகளைக் கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்குச் செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வாகனங்கள் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொண்டு, 2025.03.01 திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மூலம் அதிசொகுசு அரச வாகனங்களைப் பாவனையிலிருந்து அகற்றுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This Article