வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த குடும்பஸ்தர் மரணம்!

வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த குடும்பஸ்தர் மரணம்!

editor 2

கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், கிளிநொச்சி 190 ஆம் இலக்கத்தில் வசிக்கும் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலமையை பார்வையிட்டு, மரண விசாரணை மேற்கொள்ள உயிரிழந்தவரின் சடலத்தை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பினார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article