முறையற்ற வார்த்தைப் பிரயோகம், முறையற்ற விதத்தில் நடந்தார் அர்ச்சுனா – எதிர்க்கட்சி சபாநாயகரிடம் முறைப்பாடு!

Editor 1

சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடாவடியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

சபையில்,

தனக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் கேள்வி எழுப்பச் சென்றபோது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சயப் பெரேரா தன்னைத் தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் சபாயாகருக்கு தெரிவித்தார்.

இதன் போது இடைமறித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,

இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாகவும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் இது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை அர்ச்சுனா தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சயப் பெரேரா தெரிவித்தார்.

Share This Article