அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணையை
இலங்கை பெறும் என ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. மூன்றாவது மதிப்பாய்வை முடிக்க அண்ணளவாக மூன்று மாதங்கள் ஆகும்.
இரண்டு தேர்தல்கள் காரணமாக மூன்றாவது பரிசீலனை தாமதமாகியுள்ளது. மூன்றாவது மீளாய்வை முன்னதாக திட்டமிட்டபடி செப்ரெம்பரில் ஆரம்பித்திருந்தால், டிசெம்பருக்குள் அதனை முடித்திருக்க முடியும்.
மூன்றாவது தவணையைப் பெற்ற பிறகு ஓரளவு பொருளாதார ஸ்திரத்
தன்மையை அரசாங்கம் எதிர்பார்த் துள்ளது-என்றார்.