திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் இலங்கைத்துறை
பகுதியிலுள்ள வீடொன்றின்மீது நேற்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்கு
தல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் வீட்டின் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
முன் பகை காரணமாக இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.