யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள்
போராளி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாமுனையிலிருந்து தாளையடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த மாமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியும், கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டு வந்தவருமான நடேசு பரமேஸ்வரன் என்பவர் யாழ். போதனா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.