காலை 11 மணி வரையான தேர்தல் நிலவரம்!

காலை 11 மணி வரையான தேர்தல் நிலவரம்!

editor 2

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் காலை 11 மணிவரையிலான நிலவரப்படி ,

திருக்கோணமலை மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 26 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 22 சதவீத வாக்குகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 27 சதவீத வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு , நுவரெலியா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும்,பதுளை மாவட்டத்தில் 24 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 23 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 32 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காலை 10 மணிவரையிலான நிலவரத்தின்படி,

களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10.00 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் – 24.97 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article