கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இருவர் கைது!

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இருவர் கைது!

editor 2

கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.00 மணியளவில் செல்வாநகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காரினுள் இருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share This Article