இன்று பலத்த மழை!

இன்று பலத்த மழை!

editor 2

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Share This Article