3 ஆண்டுகளில் ஐவருக்கு 27 கோடி ரூபாய் செலவிட்டது இலங்கை அரசு!

3 ஆண்டுகளில் ஐவருக்கு 27 கோடி ரூபாய் செலவிட்டது இலங்கை அரசு!

editor 2

முன்னாள் ஜனாதிபதிகள் நால்வருக்கும் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவிக்கும் 3 வருடங்களில் 27 கோடி ரூபாயை கொடுப்பனவாக அரசாங்கம்
செலவிட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மனைவியான ஹேமா பிரேமதாஸ ஆகியோருக்கே 2022 முதல் 2024 வரையான காலப்பகுதியில் இந்தத் தொகை செல
விடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 2022இல் 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இது 2023இல் 8 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டில் 11 கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஒரு கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு தலா 2 கோடியே 91 இலட்சத்து 70 ஆயிரம்
ரூபாய் ஒதுக்கப்பட்டன. ஹேமா பிரேமதாஸவுக்கு 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதேநேரம், இந்த ஆண்டில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக வரவு – செலவு திட்டத்தில் 660 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டில் 273 கோடி ரூபாயாக இருந்தது என்று மத்திய வங்கி அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு பேராதனை பல்கலைக்கழக பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Share This Article