தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் பல தடவைகள் எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.