இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கில் தொடரும் நில கையகப்படுத்தலை இலங்கை நிறுத்த வேண்டும். மக்களின் நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.
இதில், அமெரிக்காவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலையும் வெளியிட்டார்.
அத்துடன், நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்துக்கான தடையாக உள்ளது.
பொறுப்புக்கூறலுக்கு தீர்வு காண்பதற்கு பக்கச்சார்பற்ற – வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம் என்றும் தெரிவித்தார்.