மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்!

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் நேற்று முன்தினம் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி
உயிரிழந்தார்.

ஏழாலை பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது- 42) என்ப வரே
இவ்வாறு உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் தனது வேலைத்தலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது நெஞ்சில் தச்சு பட்டறையின் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டது.

இதனால், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரி சோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share This Article