யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
புதிய கட்டட நிர்மாணம் நடந்து வரும் பகுதியிலேயே குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்ட இடங்களில் இரத்தக்கறைகளும் காணப்பட்டன என்று தெரியவருகின்றது. இதனால், குறித்த நபர் கொலை ய்யப்பட்டிருக்கலாம் என்று
பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.