யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்கீனமாக நடந்தமைக்காக சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற விவாதத்தில் உறுப்பினர்கள் உரையாற்றியபோது அவர்களின் உரைகளை பலமுறை இடைமறித்தும் குறுக்கிட்டும் அர்ச்சுனா எம். பி. பேசினார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சபைக்கு தலைமை வகித்த உறுப்பினர் அரவிந்த செனரத் அறிவுரை கூறினார்.
ஆனால், அதனை அவர் கேட்கவில்லை. தொடர்ந்தும் ஒழுங்கீனமாகவே நடந்து கொண்டார்.
இதன்போது, தவறான நடத்தைக்காக ஓர் உறுப்பினரை நிலையியல் கட்டளை விதிகளின்படி வெளியேற்ற முடியும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கா சபை தலைவருக்கு நினைவூட்டினார்.
இதன் பின்னர், நிலையியல் கட்டளை 71 ஆவது விதியின் கீழ் அர்ச்சுனா எம். பி. சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே,
அர்ச்சுனா எம். பி. உரைகளை ஒளிபரப்புவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.