மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

editor 2

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் 15 பேரும் நேற்று முன் தினம் புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் 15 பேரும் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகமும் தாய்லாந்து அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த இலங்கையர்கள் 15 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்டனர்.

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 14 பேர் கடந்த மார்ச் 18 ஆம் திகதியும், 27 பேர் கட்ந்த 2024
ஆம் ஆண்டு டிசெம்பர் 17 திகதியும் நாட்டு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article