ரணில் தேர்தலில் வென்றதும் பாராளுமன்று கலைக்கப்படும் -பிரதமர் தினேஷ்!

ரணில் தேர்தலில் வென்றதும் பாராளுமன்று கலைக்கப்படும் - பிரதமர் தினேஷ்!

editor 2

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணயnநிதியத்தின் உடன்படிக்கையை
ஏற்கமாட்டோம் என்று சிலர் சொல்கின்றனர்.

ஆனால், ஒட்டுமொத்தமாக நாங்கள் ஓர் அரசாங்கம் என்ற வகையில்
சர்வதேச அமைப்புகள் – சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய
அபிவிருத்தி வங்கி, நிதி வழங்கும் நாடுகள், பாரிஸ் கிளப் உறுப்பினர்கள்
போன்றவர்களுடன் கலந்துரையாடி தீர்மானித்த பாதையே இது.

நாங்கள் இன்னமும் கடனில் சிக்குண்டுள்ளோம். இலங்கை தொடர்ந்து இவ்வாறான கடன்நிலையில் நீடிக்க முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் வென்றதும்
2025 வரவு – செலவு திட்டம் குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு விடயங்களை உள்வாங்க வேண்டியுள்ளது. தேர்தலின் பின்னர் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் இல்லையென்றால், 3 மாதங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அது நடைபெறாது. ஏனெனில், அதற்கு முன்னர் சட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – என்றார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This Article