ஜனாதிபதித் தேர்தல் விதிகள் மீறப்படுகின்றனவா என்பது தொடர்பில் சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்படவுள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அறிவித்துள்ளது.
சமூக ஊடக கண்காணிப்பு அறிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்கப்படும் என்று அந்த அமைப்பின் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு தினத்துக்கு முந்தைய தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமது அமைப்பு ஆரம்பித்துள்ளது.
மாவட்ட மட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.