சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு – சம்பிக்க!

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு - சம்பிக்க!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை வழங்க உள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொண்டமைக்கான உடன் படிக்கையும் நேற்று புதன்கிழமை கொழும்பில கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சம்பிக்க ரணவக்க ஆதரிப்பார் என
பல்வேறு கருத்துகள் கடந்த காலத்தில் வெளியாகியிருந்தன.

என்றாலும், நேற்று தமது ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கே என சம்பிக்க ரணவக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Share This Article