ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதேநேரம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நேற்று புதன் கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. 40 வேட்பாளர்கள்
கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை வேட்பாளர்கள்
வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள்.
இதேநேரம், வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை காலை 11 மணிமுதல் 11.30 மணி வரை செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறீ ரத்நாயக்கா தெரிவித்தார்.
இதனால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியல் இன்றைய தினம் இறுதியாகும். இதேநேரம், இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாகவும் – நீண்ட வாக்குச்சீட்டு கொண்ட தேர்தலாகவும் இந்தத் தேர்தல் அமையவுள்ளது.
இன்றையதினம் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வேட்பாளர்கள்
தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள இராஜகிரியவில் அமைந்துள்ள
தேர்தல்கள் பணிமனைக்கு வருகை தரவுள்ளனர். இதையொட்டி அந்தப்
பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.