எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் வைத்து, அவர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்திருந்த அவர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.