மியன்மாரில் தொழில் தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்!

மியன்மாரில் தொழில் தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்!

editor 2

சட்டவிரோதமான வழிகளில் மியன்மாரில் தொழில் தேடுவதைத் தவிர்க்குமாறு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மக்களை கேட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின்படி, சட்ட விரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் அல்லது மனித கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாரில் வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு குடிமக்களை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது.

மியன்மாரில் சட்ட விரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழு மியன்மாரில் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் சைபர் கிரைம் பகுதி
யில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக
தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல்கள வெளியாகியுள்ளன.

அரசாங்கம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், 89 இலங்கையர்கள்
சட்டவிரோதமாக மியன்மாருக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மியன்மார் அரசாங்கத்தின் உதவியுடன் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு முயற்சியின் மூலம் 40 இலங்கையர்கள் சிறையிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

எவ்வாறாயினும், சைபர் கிரைம் பகுதியில் 54 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், இன்னும் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் வெளிப்படுத்தினார்.

Share This Article