ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்தியக் குழு இன்று (01) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மஹரகமவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடியபோது இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதம செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, உப தலைவர் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பிரதி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பிரதி செயலாளர் விஜய ரத்நாயக்க, உப தலைவரும், முன்னாள் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன உள்ளிட்ட மத்தியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.