கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2 ஆவது முனைய விரிவாக்கல் திட்டத்தினை சலுகைக் கடன் திட்டத்தின் கீழ், மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் (ஜெய்கா) இணங்கியுள்ளது.
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒத்துழைப்புடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டன.
இந்தநிலையில், இலங்கை தமது வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் கடன்மறுசீரமைப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர், இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக முன்னதாக ஜப்பான் அறிவித்திருந்தது.