வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.