சாவகச்சேரி வைத்தியசாலையில் நிகழும் குழப்ப நிலையின் தொடராக வைத்திய அதிகாரி அர்ச்சனாவை பதிவியிலிருந்து விலகுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரால் எழுதப்பட்ட கடிதம் பொலிஸாரின் துணையுடன் அவரிடம் கையளிக்க முயற்சிக்கப்பட்ட நிலையில், அவர் அதனை ஏற்க மறுத்திருப்பதாத் தெரியவந்துள்ளது.
இதனிடையே,
அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில்,
”இந்தச் செயலில் நான் இறந்தால் என்னை வைத்தியசாலையிலேயே எரித்துவிடுங்கள்” எனத் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கு முன்பாக,
தன்னை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.