2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 இறுதிக்குள், அரச துறையில் பணி புரிந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 53 ஆயிரத்து 860 ஆகும்.
புதிய ஆட்சேர்ப்பு களை தற்காலிகமாக நிறுத்துதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், ஓய்வு பெறுதல் ஆகியவை ஊழியர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்தன.
மேலும் கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையின்படி, பணியாளர்களின் பயன்பாட்டு விகிதம் 77 சதவீதம். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது நான்கு சதவீதம் குறைந்துள்ளது.
அரச செலவினங்களை குறைக்கும் வகையில் அரச விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.