அனுர – ரணில் இடையில் கூட்டு ஒப்பந்தம் – நளின் பண்டார!

அனுர - ரணில் இடையில் கூட்டு ஒப்பந்தம் - நளின் பண்டார!

Editor 1

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும்
ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

‘தேர்தல் ஒக்ரோபர் மாதம் 05,ஆம் திகதி நடை பெறும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில்
தெரிவித்திருந்தார்.

தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஒக்டோபர் மாதம் 05, ஆம் திகதி அங்கு தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து அரசாங்கத்தில் உள்ள ஹரினும், எதிர்க்கட்சியில் உள்ள அனுரவும் ரணில் விக்கிரமசிங்கவின் சீடர்கள் என்பது தெரியவருகிறது’ என நளின் பண்டார
கூறியுள்ளார்.

இதேவேளை, மியான்மார் மற்றும் ரஷ்யாவில் வாழும் இலங்கையர்களுக்காக உயிருக்காக போராடுபவர்களுக்காக ஒரு நிமிடமேனும் செலவிடாத அனுர
குமார திசாநாயக்க லண்டன், பாரிஸ், ரோக்கியோ ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share This Article