இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

Editor 1

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம்  முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளைப் போட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருந்தனர்.

Share This Article