சட்டவிரோதமாக படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதாக சந்திரிகா ஆணைக்குழுவிற்கு கடிதம்!

சட்டவிரோதமாக படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதாக சந்திரிகா ஆணைக்குழுவிற்கு கடிதம்!

editor 2

2025 உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் கூட்டணி தனது படத்தையும் பெயரையும் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மக்கள் முன்னணி என்ற கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களில் தனது படத்தினை பெயரை பயன்படுத்துகின்றது என்ற விடயம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கட்சி அத்தனகல பிரதேச சபையில் கதி;ரை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது.

எனக்கு அந்த கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை அவர்களை எனது பெயர் படத்தை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This Article