உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இணையம் ஊடாக பதிவிறக்கம் செய்யலாம்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இணையம் ஊடாக பதிவிறக்கம் செய்யலாம்!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஞாயிற்றுக்கிழமை (27) வெளியானது.

இந்நிலையில், அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளும் தங்கள் பெறுபேறுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் இன்று திங்கட்கிழமை (28) அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் தற்போது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளீடு செய்வதன் ஊடாக பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பார்வையிடலாம். அத்துடன், பெறுபேறுகளை உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.

மீள் பரீசிலணை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னர் பாடசாலைகளுக்கு அச்சிடப்பட்ட பிரதிகள் அதிபர்களுக்கு வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டது.

இந்நிலையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்கலாம்.

Share This Article