மீண்டும் வெள்ளை வான் கடத்தல்?

மீண்டும் வெள்ளை வான் கடத்தல்?

Editor 1

இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை – ஹீனடியங்கலை பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு
கடத்தப்பட்டவராவார்.

கடத்தப்பட்ட இளைஞரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வான் ஒன்றில் வந்த முகமூடி அணிந்த சிலரே இளைஞர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

இதேநேரம், இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article