நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரையில் தீர்வில்லையாம் – லண்டனில் அநுர!

நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரையில் தீர்வில்லையாம் - லண்டனில் அநுர!

Editor 1

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாணசபை முறைமை தற்போதைய வடிவத்திலேயே தொடரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

இனப்பிரச்னைக்கு மாகாண சபை முறைமையை தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தநிலையில் மாகாண சபையானது தமக்கு கிடைத்த உரிமை என தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நம்புகின்றன. எனவே, அந்த முறைமையை நீக்குவது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.

இனப்பிரச்னைக்கு இடைக்கால தீர்வாக மாகாண சபை முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எனினும், அது நிரந்தர தீர்வாகாது என்ற அடிப்படையில், நிரந்தர தீர்வைக் கண்டறியும் வரை அந்த முறையை தற்போதைய வடிவத்தில் தொடர்வதே
தமது கட்சியின் கொள்கை. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இனவாதம்
தோல்வியுற்றிருக்கும் – என்றார்.

Share This Article