4 வயதுச் சிறுமி தாக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!

Editor 1

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்க சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு அதி உச்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.

Share This Article