மின்சார சபையினை கூறுபோட்டு விற்க அரசாங்கம் திட்டமிடுகின்றது. அதனை மையப்படுத்தி கொண்டு வரப்படும் மின்சார சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மின்சார சபையை 12 பிரிவுகளாக பிரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதனூடாக மின்சார சபையை விற்பனை செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
எனவே, உத்தேச மின்சார சபை சட்டமூலம் நிறைவேற்றப்படும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.