ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களை ஒத்திவைக்க கோருகிறது ஐ.தே.க!

ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களை ஒத்திவைக்க கோருகிறது ஐ.தே.க!

Editor 1

இரு தேர்தல்களையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார இன்று (28) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் ஜனநாயக தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அது மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

நடைமுறை ஜனநாயக ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர் தேர்தல் வரைபடத்தை மாற்றுவது பற்றி பேசாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு வரப்படுவதாகவும், நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய செயற்பாடுகள் தொடர வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.

இப்போது செய்ய வேண்டியது தேர்தலை நடத்துவதல்ல, சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று தலையிட்டு அறிக்கை விடுவதே இப்போது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் கடனை மறுசீரமைத்தல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொள்வது மற்றும் சர்வதேச முதலீடுகள் மற்றும் உறவுகளை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு தெளிவான பாதை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Share This Article