பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் அபாய அறிவிப்பு விடுத்துள்ளது .
இந்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரையான கடற்பரப்பிற்குள் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அப்பிரதேச கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .