வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதை மருந்து கொடுத்த கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருபவை வருமாறு,
கைதான உறவினரான பெண் மூலமாக சிறுமிக்கு அறிமுகமான இளைஞர் கடந்த ஜனவரி மாதம் விடுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள் ளது. இது தொடர்பில் பெற்றோர் அவரிடம் விசாரித்தபோதே சிறுமி விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் வவுனியா நகர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸாரின் விசாரணையில், சிறுமி வன்புணரப்படுவதற்கு உதவினார் என்று கூறப்படும் அவரின் உறவினரான 20 வயது பெண்ணும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வவுனியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரும் அவரின் நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு
நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.