ரஷ்ய – உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் 16 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினரை வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்
டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினரை
அனுப்பிவைக்கும் ஆட்கடத்தல் தொடர்பில் இது வரை 287 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகஅவர் கூறினார்.