AstraZeneca தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற விதத்தில் அச்சமடைய வேண்டாம் என தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசி தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு குறித்த தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், இதனால் நிரந்தர மூளை பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் AstraZeneca தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம் தங்களது தடுப்பூசியில் ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இது முன்னதாகவே ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை எனவும் இந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளது.