04 கிலோ தங்கத்துடன் மூன்று பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் அருகே நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் விசேட அதிரடிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். இதன்போது, 4 கிலோ 170 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இந்தத் தங்கம் வவுனியாவுக்கு கடத்தப்பட்டன என்று தெரியவந்தது. தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், காரின் சாரதி மற்றும் பெண்கள் இருவரும் இதன்போது கைது
செய்யப்பட்டனர்.
அவர்களை பொலிஸார் ஊடாக கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.