தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்த சபை விடுத்துள்ள குறிப்பில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மக்களின் தண்ணீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அதிகளவு தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டியுள்ளது.
இதில், நெருக்கடி நிலைமை ஏற்பட் டுள்ளது. கிளிநொச்சி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு கொள்ளளவை விட அதிக தண்ணீர் பாவனை யம் தேவையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தினமும் தேவையான அளவு நீரை பொதுமக்களுக்கு வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் – என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.