கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் மின்சாரத்தை பகிர்வதற்கு இலங்கை – இந்தியா இணங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தம் – திட்டத்தின் வரைவை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனை, இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருகின்றது என்று தெரிய வருகின்றது. இரு நாடுகளின் மின்சார பரிமாற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்காக இலங்கை மின்சார சபையின் குழு ஒன்று இந்தியா சென்றது.
இதைத் தொடர்ந்து மின்சாரத்தை கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் பரிமாற இரு நாடுகளும் இணங்கின.
இதைத் தொடர்ந்தே இந்தியா திட்ட வரைவை அனுப்பி வைத்துள்ளது.
இதேசமயம், இந்தியா – இலங்கை மின்சார இணைப்பு திட்டத்தை 2030ஆம்
ஆண்டுக்குள் செயல் படுத்துவதற்கு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.