இலங்கை கடற்படையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.