கொழும்பு நகரில் சுமார் 150 அபாயகரமான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனைக் கவனத்திற் கொண்டு அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபாயகரமான கட்டடங்களை அகற்றாத பட்சத்தில் பாரிய உயிராபத்துக்கள் ஏற்படக்கூடும் என்பதன் அடிப்படையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.