மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை கைது!

மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை கைது!

editor 2

14 சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தந்தையை பொலி
ஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா – தோணிக்கல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் தொடர்பில் தனது நண்பியிடம் கூறியுள்ளார் இதனை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் பாடசாலை நிர்வாகம் மூலமாக வவுனியா பொலிஸாருக்கு முறையிடப்பட்டது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சிறுமியை விசாரணை செய்தனர்.

தாய் இல்லாதபோது இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரின் 36 வயதான தந்தைகைது செய்யப்பட்டார். சிறுமி வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article