வடக்கின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன்!

வடக்கின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன்!

editor 2

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் எதிர்வரும் 15ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.

நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றிய அவர், பின்னர் கொழும்புக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றும் எல்.இளங்கோவன், இம்மாதம் 15 ஆம் திகதி முதல் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

அதேநேரம் வடக்கு மாகாணத்தின் தற்போதைய பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஜனாதிபதி செயலகத்துக்கு மாற்றலாகிச் செல்கின்றார்.

இதற்கான அறிவித்தல் நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை எழுத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article