வெளிநாட்டுத் தூதுவர்கள் தொடர்பில் கோட்டாபய யாரை குறிப்பிடுகிறார்? – ரஷ்யத் தூதரகம் கேள்வி!

வெளிநாட்டுத் தூதுவர்கள் தொடர்பில் கோட்டாபய யாரை குறிப்பிடுகிறார்? - ரஷ்யத் தூதரகம் கேள்வி!

editor 2

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புத்தகத்தில் இலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வெளிநாட்டுத் தூதுவர்களின் வருகைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில்,

குறித்த கருத்து எந்தெந்த நாடுகளின் இராஜதந்திரிகளை குறிப்பிடுகிறது எனவும் ரஷ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி’ என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

Share This Article